தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை நிதியை விடுவிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலையே தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்றைய கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பை துரிதப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியவர்,
“சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். அத்தோடு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.�,