தேர்தல் தேதி எப்போது? இன்று மாலை 4.30க்கு அறிவிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத் தேர்தல் எப்போது என இன்று மாலை தெரியும். சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதி என்றைக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று பிப்ரவரி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் ஐந்தாம் எண் அரங்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தேர்தல் ஆணையத்தின் ஊடகம்- தகவல் தொடர்பு பிரிவின் கூடுதல் இயக்குனர் சரண் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ அசாம் ,கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தல் கால அட்டவணை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை 4.30க்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்”என்று தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு சமூக இடைவெளி விதிமுறைகளை ஒட்டி பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷன், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனங்கள் மற்றும் தேர்தல் நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே அரங்கம் எண் 5 இல் முன்னுரிமை வழங்கப்படும். ஒரு நிறுவனம் சார்பில் ஒரு குழு மட்டுமே வரவேண்டும். 3.45 மணியில் இருந்தே பத்திரிகையாளர்கள் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிபார்ப்பால் கோட்டை முதல் ஓட்டுபோடும் வாக்காளர் வரை பரபரப்பில் இருக்கிறார்கள்.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share