எப்போதோ நடந்திருந்தாலும் கூட மாணவிகள் மீதான பாலியல் வன்முறை குறித்த புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சர்ச்சைக்குப் பின், தயக்கங்களை உடைத்து பல பெண்களும் தாங்கள் பாதிக்கப்பட்ட வடுவை பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். மி டூ என்று பெயரிடப்படாவிட்டாலும் இது இப்போது ஓர் இயக்கமாகவே மாறியிருக்கிறது.
அந்த வகையில் ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் போதிக்கிறேன் என்று சொல்லி பள்ளிக் கூடங்கள் நடத்தும் சிவசங்கர் பாபாவின் சிலுமிஷங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்துள்ளன. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ஸ்கூல் மாணவிகள் இப்போது மெல்ல மெல்ல பாபாவின் பலான பராக்கிரமங்கள் பற்றி, தங்களது பெயரை மட்டும் கழற்றி வைத்துவிட்டு பொது வெளியில் வைக���கிறார்கள். அதை அந்த பள்ளியிலேயே படித்த மேலும் சில மாணவிகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்படி ஒரு மாணவிதான் அமிர்தா. இவர் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் முன்னாள் மாணவி. சிவசங்கர் பாபா மீதான புகார்களை ஒருங்கிணைப்பதிலும், அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தருவதிலும் தீவிரமாக இருக்கிறார் அமிர்தா.
மின்னம்பலம் யு ட்யூப்புக்கு அமிர்தா அளித்த பிரத்யேக நேர்காணலில் சிவசங்கர் பாபாவின் சின்னத்தனங்கள் பற்றி விரிவாகவே கூறியிருக்கிறார் அமிர்தா.
“நான் 2009-11 ஆம் ஆண்டுகளில் சுஷில் ஹரி பள்ளியில் படித்தேன். அந்த பள்ளி அழகான வனம் போல இருக்கும். மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். அந்தப் பள்ளியைப் பார்த்தாலே இங்கேதான் படிக்க வ��க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்குத் தோன்றும்.
மிகப் பரந்த இடத்தில் அமைந்திருக்கும் இப்பள்ளி வளாகத்துக்குள்தான் சிவசங்கர் பாபாவும் இருக்கிறார். மாணவிகளும் விடுதிகளில் வசிக்கிறார்கள். பாபாவின் சிஷ்யர்களுக்கும் இங்கே குடியிருப்புகள் உள்ளன. பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பாபா வழிபாடு நடக்கும். பாபா பெண்களுடன் டான்ஸ் எல்லாம் ஆடுவார். எனக்கு அதையெல்லாம் பார்க்க காமெடியாக இருக்கும்.
பாபாவின் பக்தர்களாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், பாபாவின் பக்தர்களாக இல்லாவிட்டால் வேறு மாதிரியாகவும் அந்த பள்ளியில் நடத்துவார்கள். நான் பாபாவால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தகவல்களைப் பெற்று அதை வெளியே சொன்னேன் என்று என்னை பிளஸ் ஒன் படிக்கும்போது டிசி கொடுத்து அனுப்பிவிட்டார்கள். நான் 11ம் ஆம் வகுப்பு படிக்கும்போது என் கூட படிக்கும் பையனுக்கு டெக்ஸ்ட் புக் கொடுத்த��ன். அதைக் காரணம் காட்டி மாணவர்களோடு பழகுகிறாள் என்று சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள். ஆனால் உண்மையான காரணம் நான் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளைப் பற்றி புதிதாக வரும் மாணவிகளிடம் சொல்லி அவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான். ஆண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம் முன்பு என்னை பள்ளியை விட்டு வெளியே அனுப்பினாலும் தேர்வு எழுதலாம் என்று அனுமதித்தார்கள்.
ஒரு மாணவி சோகமாக இருந்தாள். ஏன் என்று கேட்டேன். ‘குடும்பப் பிரச்சினை என்று பாபாவிடம் சென்றேன். அவர் கண்ணை மூடு என்று சொன்னார். கண்ணை முடியதும் மார்பகங்கள் மீது கை வைத்து பிசைய ஆரம்பித்துவிட்டார்’ என்று சொன்னாள் அந்த மாணவி. ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவிகள் கிட்டத்தட்ட குழந்தைகள்தான். பாலியல் சார்ந்த ���டவடிக்கைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று கூட தெரியாத வயது. அதிர்ந்து போய் அந்த பெண் வெளியே ஓடி வந்துவிட்டாள். இதுபோன்ற இதைவிட நூறு மடங்கு பயங்கரமான அனுபவங்கள் பாபாவால் பல மாணவிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றன.
பாபாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓடிச் சென்று ஹாஸ்டல் வார்டனிடம் சொல்லியிருக்கிறாள். அதற்கு வார்டன், ‘பாபாதான் நம் கடவுள். அவரை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உனக்கு புண்ணியம்’என்று சொல்லியனுப்பியிருக்கிறார்.
நமக்கு பாபாதான் பாய் ஃப்ரண்ட். பாபாதான் நமக்கு எல்லாம் என்று சொல்லியே அந்தப் பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த பள்ளியில் கல்விக் கட்டணம், டொனேஷன் எதுவும் கிடையாது என்பதால் ஏழைகள், சமூகத்தில் பின் தங்கிய மக்கள்தான் இந்த பள்ளியில் சேர்கிறார்கள். அவர்களிடம் இதுபோன்ற அத்துமீறல்கள் செய்தால் அவர்கள் எங்கும��� சென்று புகார் சொல்ல மாட்டார்கள் என்பதால்தான் பல வருடங்களாக இதுபோன்று பெண்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் சிவசங்கர் பாபா.
அந்த பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காகத்தான் இப்போது நாங்கள் போராடி வருகிறோம். சிவசங்கர் பாபாவை குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணைக்காக வரும் 11 ஆம் தேதி அழைத்திருக்கிறது. விரைவில் நம் எல்லாருக்கும் நல்ல செய்தி வரும்” என்று தன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் அமிர்தா.
அதேநேரம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகம், “இது எல்லாமே போலியான புகார்கள். யார்
வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பள்ளிக்கு வந்து பார்வையிடலாம். பாபா மீதான அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்”என்று கூறியிருக்கிறது.
பள்ளி நிர்வாகம் இப்படி மறுத்திருக்கிறதே என்று சிவசங்கர் பாபாவுக்கு தொடர்புடைய சிலரிடம் நாம் விசாரித்தபோது அவர்கள��� ஒரு வீடியோவை நம்மிடம் ஓட விட்டுக் காட்டினார்கள்.
**அதில் இருக்கும் காட்சிகள் என்னென்ன? தொடர்ந்து பார்ப்போம்.**..
**-வேந்தன்**
�,”