yபேராசிரியர் மறைவு: திமுக ஏழு நாட்கள் துக்கம்!

Published On:

| By Balaji

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மறைவை ஒட்டி, திமுக ஏழு நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற தோழராகவும் 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும் கழக ஆட்சியில் சமூக நலம் மக்கள் நல்வாழ்வு கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர், சில நாட்கள் உடல் நலிவுற்று இருந்து இன்று 7- 3 -2020 அதிகாலை ஒரு மணியளவில் மறைவெய்தியதை ஒட்டி, கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு கழகக் கொடிகளை ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share