gகுணமடைந்து வீடு திரும்பினார் அமித் ஷா

Published On:

| By Balaji

உள் துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்து வீடு திரும்பினார்.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்.

எனினும் உடல்வலி மற்றும் சோர்வு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள போஸ்ட் கொரோனா வார்டில் அமித் ஷா கடந்த 18ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அமித் ஷா நலமாகிவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 29ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

Union Home Minister Amit Shah, admitted here for post COVID care, was discharged today morning. He has fully recovered and is fit to resume his routine activities: AIIMS, New Delhi pic.twitter.com/WkMzKfrhX8

— ANI (@ANI) August 31, 2020

இந்த நிலையில் பூரண குணமடைந்த அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 31) வீடு திரும்பினார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா, இன்று காலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். மேலும், தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்கும் உடல் உறுதி அவரிடம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share