சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு!
u
சட்டப்பேரவையில் சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்த நான்கு மாற்றுத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து,மறுநாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று(ஆகஸ்ட் 16) இரண்டு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையின் மாற்று தலைவர்களை அறிவித்துள்ளார்.
மாற்றுத் தலைவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், உதயசூரியன், எஸ்.ஆர் ராஜா, டிஆர்பி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில் மாற்றுத் தலைவர்கள் அவையை வழிநடத்துவார்கள். இவர்கள் அனைவரும் அதிகமான முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,