தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்!

politics

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் ”தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ள இவர் ஓராண்டு காலம் சிறப்பு பிரதிநிதியாக செயல்படுவார். விரைவில் இவர் பதவி ஏற்றுக் கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து 1999, 2004, 2009 என மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றவர் ஏ.கே.எஸ்.விஜயன்.

டெல்லி பிரதிநிதி என்பவர் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார். மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை முன்பு எடுத்துவைப்பார். இங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்கள், கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகளைக் கவனிப்பார். தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் டெல்லி பிரதிநிதிக்கும் உண்டு. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு அறை ஒதுக்கப்படும். தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும்போது சிறப்பு பிரதிநிதி உடன் இருப்பார்.

இதற்குமுன் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *