புதிய பொதுக்குழு அறிவிப்பு செல்லாது: வைத்திலிங்கம்

politics

அதிமுக பொதுக்குழுவிலிருந்து வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், புதிய தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என தெரிவித்தார்.

இன்று காலை கூடிய அதிமுக பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. தொடர்ந்து அரங்கில் ஈபிஎஸுக்கு ஆதரவாகவும், ஓபிஎஸுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. ஜூலை 11ல் புதிய பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அரங்கிலிருந்து வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு இது. புதிய பொதுக்குழுத் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால்தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

அதேசமயத்தில், ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஈபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.