Yஅதிமுக பட்டியல்: வாசன் அதிர்ச்சி!

Published On:

| By Balaji

அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு இன்று அதிமுக வேட்பாளர் பட்டியலோடு அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக வெளியிட்ட பட்டியலில் தமிழ் மாநில காங்கிரஸ் கேட்ட அனைத்து தொகுதிகளும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் இந்தப் பட்டியலைக் கண்டு தமாகா தலைவர் ஜிகே வாசன் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜிகே வாசன் தமாகாவின் விருப்ப தொகுதிகள் பட்டியலையும் முதல்வரிடம் கொடுத்துள்ளார்.

பட்டியலில் இடம்பெற்றிருந்த

பாபநாசம், திருப்பூர், காங்கேயம், மதுரை தெற்கு, பரமக்குடி, விளவங்கோடு, தூத்துக்குடி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் பல இன்று வெளியிட்ட அதிமுகவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் சில தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜி கே வாசனின் மைத்துனரும் தமாகாவின் இரண்டாம் கட்ட தலைவருமான சுரேஷ் மூப்பனார் பாபநாசம் தொகுதியில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் வாசன். இன்று சுரேஷ் மூப்பனாருக்கு பிறந்தநாள். அந்த வகையில் அவருக்கு பாபநாசம் தொகுதியை பரிசளிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார் வாசன். ஆனால் அதிமுகவின் பட்டியலில் பாபநாசத்துக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேற்றப்படுகிறதோ என்ற எண்ணம் கட்சியின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பட்டியலையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இன்று இன்று மாலை மாவட்ட தலைவர்களோடு ஆலோசித்து வருகிறார்.

.**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share