பெண்களுக்கு பயணசலுகை, வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி!

Published On:

| By Balaji

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 14) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வெளியிட்டனர். அதில் 163 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அவை

**1.அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு**

குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி

அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும்.

**2.மகளிர் நலன் (குல விளக்கு திட்டம்)**

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500/- வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

**3.மகளிருக்கு பேருந்து பயணச்சலுகை**

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படும்.

**4. சட்டம் ஒழுங்கில் தமிழகம் அமைதிப்பூங்கா**

தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர்ந்து திகழ்ந்திடும் வகையில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் தொடர்ந்து பேணிகாக்கப்படும்.

**5. அம்மாவின் தொலைநோக்குத் திட்டம் 2023**

அம்மா உருவாக்கிய தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் VISION-2023-ன் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விரைந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும்.

அம்மாவின் அரசால் வெளியிடப்பட்ட மாநில சுற்றுச்சூழல் கொள்கை, மின் ஆளுமை கொள்கை,

சுற்றுலாக் கொள்கை, தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை, மாநில வனக்கொள்கை, மாநில இளைஞர் நலன் கொள்கை, உணவுப்பதப்படுத்தும் கொள்கை, வானூர்தி பாதுகாப்பு கொள்கை, சூரிய சக்தி கொள்கை, மின்சார வாகன கொள்கை, சிறு, குறு தொழில் நிறுவன கொள்கை,

புதிய தொழில் கொள்கை-2021 ஆகிய அனைத்து கொள்கைகளையும் திறம்பட செயல்படுத்தி தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.

**6. ரேஷன் பொருட்கள் வீடுதேடி**

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாகச் சென்று வழங்கப்படும்.

7. வாழ்வாதார உதவியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு ஆறு விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

**8. உழவு மானியம்**

விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.

**9. அனைவருக்கும் சூரியசக்தி சமையல் அடுப்பு**

அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.

**10. அம்மா வாஷிங்மிஷின் வழங்கும் திட்டம்**

பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்.

**11. கல்விக்கடன் தள்ளுபடி**

மாணவர் / பெற்றோர் நலன் காக்க கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

12. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

**13. உயர்கல்வி மற்றும் இளைஞr நலனுக்கான திட்டங்கள்**

அ. திறன் வளர்ப்புக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

ஆ. புதிய தொழில்நுட்பத்துடன் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 3500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தமிழக திறன் மேம்பாட்டு நிதி அமைக்கப்படும்.

இ. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தொழில் வழிகாட்டும் நிறுவனங்களுக்கு நிதி உதவி

அளித்திடும் வகையில் அம்மா தொழில் வளர்ச்சி மூலதன நிதியம் மற்றும் தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு உதவி நிதியம் தொடங்கப்படும்.

ஈ. உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், எம்.ஐ.டி. போன்ற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்.

உ. தனியார் கூட்டு முயற்சியுடன் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பிரத்யேக நிதி உருவாக்கப்படும். இதன்மூலம் அனைத்து துறைகளிலும், தமிழ்நாடு ஆராய்ச்சிக்கான இருப்பிடமாக உருவாகும்.

ஊ. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கைவினை கலைஞர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சிறு வணிக வளாகம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும்.

எ. உலகத் தரத்தில் விளையாட்டுப் பயிற்சி மற்றும் விளையாட்டு அரங்கங்கள் மண்டலம் வாரியாக அமைக்கப்படும்.

ஏ. கிழக்கு கடற்கரையில் கடல்நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஐ. அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.

14. UPSC, NEET, IIT-JEE, TNPSC தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

**15. வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி**

அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.

16. முதியோர் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1000/-லிருந்து ரூ.2000/- ஆக உயர்வு

சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000/-லிருந்து ரூ.2,000/-ஆக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

**17. திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை**

அ.திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அம்மா சீர்வரிசைப் பரிசு வழங்கப்படும்

ஆ. திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 50,000/- ரூ.60,000/- ஆகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 25,000/- ரூ.35,000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

**18. விலையில்லா அரசு கேபிள் இணைப்பு**

அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

**19. நோய் தடுப்புக்கு கொசுவலைகள்**

நலிந்த மக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கொசுவலைகள் வழங்கப்படும்.

**20. மின்மிகை மாநிலம்-தொலைநோக்குப் பார்வை**

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற நிலை தொடர, தொலைநோக்கு பார்வையுடன் மின்உற்பத்தி மென்மேலும் பெருக்கப்படும்.

21. மத்திய அரசுப் பணிக்கு மாநில அளவிலான தேர்வு தமிழ் நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளில், மையப்படுத்துதல் தேர்வு முறைக்குப் பதிலாக,

மாநில ரீதியான தேர்வு முறையை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து, மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்திட, மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்

22. இந்திய ஆட்சி மொழியாக தமிழ் இந்திய அரசின் ஆட்சி மொழியாக உயர்தனி ஆதிமொழியான தமிழ் மொழியினை அறிவித்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசினை அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.

**23. தமிழ் கட்டாயப்பாடம்**

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கபடும்.

**24. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனித்துறை**

வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க தமிழ்நாடு அரசு தனித்துறை அமைத்திட நடவடிக்கை எடுக்கும்.

25. , மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழைகொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

26. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்.

.

27. தமிழ் வளர்ச்சி இருமொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்

*திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.

*தமிழ்நாட்டில் இயங்கும் மைய அரசு / அரசு சார் நிறுவனங்களில்,தமிழ் மொழியில் அறிவிப்புகளை வெளியிடவும், தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும் வலியுறுத்தப்படும்.

*தற்போது உள்ள நடைமுறைப்படி பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதியுதவி வழங்கப்படும். மேலும், சர்வதேச பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழரின் தொன்மையை பறைசாற்றும், சிவகங்கை மாவட்டம் – கீழடி, தூத்துக்குடி மாவட்டம் –

ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை, ஈரோடு மாவட்டம் – கொடுமணல், அரியலூர் மாவட்டம் – கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் – பட்டறை பெரும்புதூர், இராமநாபுரம் மாவட்டம் – அழகன்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

**28. ஈழத் தமிழர் உட்பட எழுவர் விடுதலை**

மைய அரசு தாமதமின்றி, உடனடியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தக்க ஆணையிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உணர்வு பூர்வமாக தொடர்ந்து வலியுறுத்தும்.

**29. ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை**

இலங்கையில் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைத்திட – ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மைய அரசு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

30. ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணுதல்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைத்திடவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை

கிடைத்திடவும், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திரத் தீர்ப்பாயம்

மூலம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.இ. அண்ணா தி.மு.கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.

31. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை / குடியிருப்பு அனுமதி இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை, குடியிருப்பு அனுமதி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

32. விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்

33. முக்கிய விவசாய விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை. மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

34. வேளாண் விளைபொருள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு

வேளாண் விளைபொருள் உற்பத்தி மற்றும் லாபகரமான விவசாய விற்பனை நெறிமுறை மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்தித் தர உறுதியளிக்கப்படுகிறது.

35. வாழை நூலில் இருந்து ஆடை செய்யும் தொழிற்கூடங்கள் வாழை விவசாயிகளின் வாழ்வு சிறக்க வாழையிலிருந்து நூல் எடுத்து ஆடை நெய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்.

இதனால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருகும்.

36. பனை மரம் வளர்ப்பு அனைத்து நீர்நிலைகளின் கரைகளிலும், குறிப்பாக குடிமராமத்து

பணிகள் மேற்கொள்ளப்பட்ட நீர் நிலைகளின் கரைகளிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், கடலோர மாவட்ட சாலை ஓரங்களிலும் தமிழ்நாட்டின் சின்னமான பனை மரங்கள் வளர்க்கப்படும்.

**37. ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு**

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு மற்றும் பதப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும். இக்கூடங்களை கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கை சென்றடையும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

**38. சூரிய சக்தி மின் மோட்டார் மானியம் தொடரும்**

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

39. மாநில வேளாண்மை ஆணையம் உருவாக்கப்படும். வேளாண் துறையில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றை எதிர்கொள்ள தேவையான உத்திகளையும், திட்டங்களையும் உடனுக்குடன் தீட்டி, வேளாண் தொழிலை மேலும், இலாபகரமாக ஆக்கி, வேளாண் பெருமக்களின் நலன் காக்க மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும்.

**40. நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை**

கோதுமைக்கு வழங்கி வரும் ஆதார விலைக்கு இணையாக நெல்லுக்கும் உயர்த்தி தரவேண்டும் என்று மைய அரசை வலியுறுத்துவோம்.

நெல்லுக்கான உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கவனத்தில்கொண்டு, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி,

கரும்புக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

41. இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும்.

42. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.

43. குறைந்த வாடகையில் உள்ளூரிலேயே பண்ணை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்கும் வகையில், பண்ணை இயந்திர மயமாக்கல் ஊக்கப்படுத்தப்படும்.

44. வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள் டெல்டா மாவட்டங்களில் பிரத்யேகமாக அமைக்கப்படும்.

45. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் எளிதில் பெற்று பயன்படுத்த வசதியாக முதல்வர்-விவசாயி வங்கி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 309 தாலுகாக்களிலும் இந்த வங்கி தொடங்கப்படும். இந்த வங்கியின் மூலம் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர்கள், புல்டோசர்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உபகரணங்களும் வாடகை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

46. நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும்.

**47. வறண்ட நில விவசாயி ஆராய்ச்சிக்கூடம்**

தமிழ்நாட்டில் வறண்ட நிலத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து வறண்ட நில விவசாய ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்தப்படும்.

**48. தென்னை விவசாயிகளின் நலன்.**

அ. தென்னையிலிருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி, அதனை நாடு முழுவதும் விற்பனை செய்தும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆ. தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டு தென்னை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும்

இ. கொப்பறை தேங்காய் விலை குறையும் போதெல்லாம் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பறையை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

49. வழக்குகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் போன்ற எவ்வித தடையும் இல்லாமல், கரிசல் மண், களிமண், தூர்வை மண் தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

**50. கால்நடை வாரியம்**

கால்நடைகளின் நலன், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், அதன் மூலம், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வு சிறக்க, கால்நடை வாரியம் அமைக்கப்படும்.

51. தமிழ்நாட்டில் மேலும் ஐந்து புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

52. தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

**53. பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு**

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய பாதிப்பிலிருந்து மக்களுக்கு உதவிட

பெட்ரோல், டீசல் விலையினை குறைத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கனிசமாக குறைத்திட மைய அரசை அதிமுக

54. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-லிருந்து ரூ.2500/- உதவித்தொகை உயர்வு

55. 100 நாள் வேலை – 150 நாட்களாக உயர்வு

56. அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000/-லிருந்து ரூ.3,40,000/- ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

57. பொங்கல் பண்டிகைக்கு உதவித்தொகை தொடரும்.

58. இரண்டுமாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

59. 9-10-11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் விரிவுப் படுத்தப்படும்.

60. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி விரிவாக்கம்.

61. அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணாக்கர்களுக்கும் மடிக்கணினி சக மாணவர்களைப் போல வழங்கப்படும்.

62. அங்கன்வாடி குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து நிலை மாணாக்கர்களுக்கும் தினம்தோறும் 200 மி.லி பால் / பால் பவுடர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

**63. பால் உற்பத்தியாளர் – நுகர்வோர் நலன்**

அ. பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை ரூ.2/- உயர்த்தி வழங்கப்படும்.

ஆ. நுகர்வோர்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2/- குறைக்கப்படும்.

64. தமிழ்நாடு முழுவதும் துவக்கப்பட்ட சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

**65. புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம்**

அ. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு டாக்டர். சாந்தா நினைவு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்படும்.

ஆ. புற்றுநோய் சிகிச்சைக்கு என Linear Accelerator வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

இ. அரசு மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புற்று நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். இங்கு ரேடியேசன் மற்றும் கீமோதெரப்பி சிகிச்சைகள் வழங்கப்படும்.

ஈ.அம்மா தங்க திட்டம் கீழ் நடைபெறும் முழு உடல் பரிசோதனை மற்றும் புற்று நோய் சிகிச்சை அனைத்து மாவட்ட மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

உ. தற்போது குழந்தையில்லாதோர் தனியாரிடம் மிகுந்த செலவில் கருத்தரிப்பு செய்ய வேண்டிய நிலையில், ஏழை மற்றும் எளியோர் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரிப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்படும்.

**66. மகப்பேறு விடுப்பு, ஒரு வருடமாக உயர்வு**

பெண் அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திலிருந்து ஒரு வருடமாக உயர்த்தப்படும்.

67. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 18,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்

68. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின், வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த முதலீட்டுத்தொகை 50,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

69. எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

70. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் வழங்க தனியாக மகளிர் வங்கி உருவாக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான அளவு கடனுதவி வழங்கப்படும்.

71. சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கு மின்னணு வணிக முறை ஊக்குவிக்கப்படும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share