yசிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்: அதிமுக வாக்குறுதி!

politics

இன்று வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், குடியுரிமைத் திருத்த தடைச் சட்டத்தை கைவிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

**72. அம்மா பேங்கிங் கார்டு**

எழை, எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டுவழங்கப்படும். இத்திட்டமானது, அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள

கடன்களை சுலபத் தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், அவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

73. அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள்.

74. இரண்டாம் கட்ட நகரங்களில் C.C.T.V கண்காணிப்பு

75. 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

76. ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 25,000/- மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ திட்டம் தொடங்கப்படும்

77. மதுபானக் கடைகள் படிப்படியாக மூடுதல் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும்.

78. கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி, அபராத வட்டி

தள்ளுபடி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன்பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை One Time Settlement என்ற அடிப்படையில் கடன்

தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

79. மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுதல்.

80. மைய அரசு புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்த தடைச்சட்டத்தை கைவிட வலியுறுத்தல்.

81. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியினை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

82. அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல்

அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

**83. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.**

84. திருக்குர் ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது

பாகவி அவர்கள் பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம் உருவாக்கப்படும்.

85. ஜெர்மனிய தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்களின் நினைவாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, அங்கு பொது

நூலகம் அமைக்கப்படும்.

86. இந்து ஆன்மீகப் பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.

87. ஹஜ் பயணத்திற்கு செல்ல வழங்கப்படும் தொகையான ரூபாய் 6 கோடியை உயர்த்தி ரூபாய் 10 கோடியாக வழங்கப்படும்.

88. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் 1000 பேருக்கு ரூ.37,000/- அரசு வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

89. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களுக்கு நலவாரியம்.

90. சிறுபான்மையினருக்கு மயான இடம் விலையில்லாமல் வழங்குதல்

.

91. அனைத்து மத பழுதடைந்த ஆலயங்கள் புனரமைப்பு

92. கிராம ஊர்க்கோயில்களில் பூஜை செய்யும் கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2,000/- வழங்கப்படும். மேலும், வருமானம் இல்லாத அனைத்து மத கோயில்களுக்கும்

இலவச ஒரு விளக்கு திட்டம் அமல்படுத்தப்படும்.

93. திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்.

94. தூய்மைப் பணியாளர் ஊதியம் ரூ.6000/- ஆக உயர்வு

95. தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

96. ஆதிதிராவிடர் தாட்கோ-கடன் தள்ளுபடி

97. ஆதிதிராவிடருக்கு புதிய தொகுப்பு வீடுகள்

98. மதம் மாறிய ஆதிதிராவிடருக்கு பழைய சலுகையே தொடரும்

99. தமிழ்நாட்டில் படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் போன்ற இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஏற்கனவே அம்மா அவர்களால்

எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறைவேற்ற அதிமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *