மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற பிரதமர் அறிவிப்புக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட புதிய மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். அதேசமயத்தில் இந்த அறிவிப்புக்கு பல அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் விமர்சனம் எழுகின்றன.
இந்நிலையில் நடிகர் கார்த்தி ட்விட்டரில்,”மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,