இன்றே தீபாவளி: 10.5% ரத்துக்கு கொங்கு கொண்டாட்டம்!

politics

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கொண்டுவரப்பட்டு தற்போதைய திமுக ஆட்சியில், முதல்வர் முக ஸ்டாலினால் அரசாணை வெளியிடப்பட்ட வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று (நவம்பர் 1) ரத்து செய்துள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி எம் பி சி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் பல்வேறு சமூகத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள நிலையில், கொங்கு பகுதியில் இந்த இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பையடுத்து வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள் வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினர்.

புதிய திராவிடர் கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜு தலைமையில் நாமக்கல் பகுதியில் இன்று பகலில் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ராஜுவிடம் பேசினோம்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த தீர்ப்பை வேட்டுவக் கவுண்டர்கள் சமுதாயம் சார்பில் முழுமையாக வரவேற்கிறோம். சமூக நீதி என்ற பெயரில் எங்களை போன்ற பல்வேறு சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 % உள் ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 18% போக மீதி இருக்கும் 2 சதவீதத்தில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வேட்டுவக் கவுண்டர் உள்ளிட்ட 40 சாதிகளுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் என்று ஆனது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தோம். இந்த நிலையில் நீதிமன்றம் சரியான முடிவு எடுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்த நாளை ஒட்டி எங்களுக்கு தீபாவளி இன்றே வந்துவிட்டது”என்று கூறினார் கே.எஸ். ராஜ்.

**வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *