முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும், 20 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
**-பிரியா**
�,