தோல்விக்குக் காரணம்: தினகரனிடம் மனம் திறந்த சீனியர்!

politics

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுக கட்சி தேமுதிகவோடு கூட்டணி வைத்தது. அமமுக 161 தொகுதிகளிலும், தேமுதிக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏஐஎம்ஐஎம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இக்கூட்டணியில் இடம்பெற்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து பிரம்மாண்ட வெற்றிபெற்ற தினகரன் இம்முறை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தோல்வியைத் தழுவினார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோற்றது.தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினர்.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். தானே தோற்ற நிலையில், “தைரியமாக இருங்கள் பார்த்துக் கொள்வோம்” என ஆறுதல் கூறியுள்ளார் டிடிவி.

மேலும் சில நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்வி தொடர்பாக அலைபேசியில் சில நிமிடங்கள் ஆலோசனையும் நடத்தியுள்ளார் தினகரன்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பிரச்சாரத்தில் இருந்தபோது பெண்களிடம், ‘யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்று கேட்டபோது, ’நீங்க எங்க வீட்டு பிள்ளை. எங்கள் ஒட்டு உங்களுக்குதான். எப்போதும் இரட்டை இலை சின்னத்தில் தான் போடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர். இதை தேர்தல் முடிவுக்குப் பிறகு தினகரனிடம் தெரிவித்த பழனியப்பன், “மக்கள் அமமுகவினரை அதிமுகவாகத்தான் பார்க்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற மக்கள் அம்மா என்று நாம் சொன்னாலே இரட்டை இலை என்றுதான் சொல்கிறார்கள்’என்று தினகரனிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல சில நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறார் தினகரன்.

**-வணங்காமுடி**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *