எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான்- சரத்குமார்

Published On:

| By Balaji

2021 தமிழக சட்டசபைத் தேர்தல் மாற்றத்தினை கொண்டு வரும் தேர்தலாக இருக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி-தூத்துக்குடி வழியில் புதுகோட்டை பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து, விழா மேடையில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அறிவித்தனர்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டநிலையில் வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் சமக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமக கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் தெரிவித்தார்.

பலத்த கரகோஷம் ஆரவாரத்தைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெளிப்படுத்தினர்.

சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் ஆணையிட்டால் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலர் நடிகை ராதிகா சரத்குமாரும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார், “சரத்குமார் எதற்கும் பயப்படமாட்டார், அன்புக்கு மட்டும்தான் பயப்படுவார், வேறு எதற்கும் பயப்படமாட்டார். இந்தத் தேர்தல் மாற்றத்தினை கொண்டு வரும் தேர்தல் என்று நிச்சயமாகச் சொல்வேன். வெற்றி என்பது கறிவேப்பிலை கொத்தமல்லி கிடையாது.

நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி, வேளச்சேரி தொகுதியில் நிற்க வேண்டும் என்று கட்சியினர் சொல்லி வருகின்றனர். நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் பேசிய சமக தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், மூன்றாவது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்றும் அறிவித்தார். அப்போது, கூட்டத்தில் பலத்த கைதட்டல் வந்தது.

**_சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share