கலைஞர் நூலகப் பணியில் தாமதம் கூடாது: அமைச்சர் எ.வ.வேலு

Published On:

| By Balaji

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடம், நூலகப் பணிகள் ஆகியவற்றில் எந்தவித காலதாமதமும் இருக்கக் கூடாது என அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று(அக்டோபர் 18) காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர்களுடன் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுப்பணித் துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்திய விவரம், நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய விதம் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த அமைச்சர்,

பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்களுக்கு உடனடியாக ஆணை பிறப்பித்து, பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் அவற்றை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம், மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதில் எந்த காலதாமதமும் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share