iதிமுக எம்.பி.யின் சொத்துக்கள் முடக்கம்!

Published On:

| By Balaji

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி தற்போது கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கவுதமசிகாமணிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 16) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணிக்கு சொந்தமான 8.60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (ஃபெமா) பிரிவு 37 ஏ இன் கீழ் பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததாக கவுதமசிகாமணி மீது புகார் வந்தது எனக் குறிப்பிட்ட அமலாக்கத் துறை, “அதுதொடர்பான விசாரணையில், ரிசர்வ் வங்கின் ஒப்புதல் இல்லாமல் ஜகார்த்தாவின் பி.டி எக்செல் மெக் இந்தோவின் 2,45,000 பங்குகளை வாங்குவதில் கவுதமசிகாமணி 1,00,000 டாலர் (ரூ. 41,57,225) வெளிநாட்டு முதலீடு செய்தார். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எம்/எஸ் யுனிவர்சல் பிசினஸ் வென்ச்சர்ஸில் 55,000 டாலர் ( ரூ 22,86,924) முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் ஃபெமாவின் பிரிவு 4 இன் விதிகளை மீறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் கவுதமசிகாமணி 2008-09 முதல் 2012-13 வரையிலான காலப்பகுதியில் யுஏஇ யுனிவர்சல் பிசினஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் சம்பாதித்த ரூ .7,05,57,237 தொகையை திருப்பி அனுப்பத் தவறிவிட்டார் என்றும், பெமா விதிமுறைகளை மீறி இதுநாள் வரை அங்கு பரிவர்த்தனை வைத்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.

ED seizes agricultural lands, commercial & residential buildings in Tamil Nadu, balances in bank accounts, and shares belonging to Gautham Sigamani, Member of Parliament totaling to ₹ 8.6 crores under Section 37 A of FEMA for illegally holding assets in abroad.

— ED (@dir_ed) October 16, 2020

மேலும், கவுதமசிகாமணிக்கு சொந்தமாக தமிழகத்திலுள்ள விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை மற்றும் பங்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் என மொத்தமாக ரூ .8.60 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடந்து வருகிறது என அமலாக்கத் துறை செய்திக் குறிப்பு கூறுகிறது.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share