�பாஜக வேட்பாளரைக் குறிவைத்து குண்டு வீச்சு- மேற்கு வங்க கடைசி கட்டத் தேர்தல்!

Published On:

| By Balaji

மேற்கு வங்க மாநிலத்தின் எட்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் இன்று (ஏப்ரல் 29) காலை தொடங்கி நடந்து வருகிறது.

மால்டா, முர்ஷிதாபாத், பிர்பம் மற்றும் வடக்கு கொல்கத்தா மாவட்டங்களில் பரவியிருக்கும் மொத்தம் 35 தொகுதிகளில் நடக்கும் இன்றைய தேர்தலில் மொத்தம் 285 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இன்று காலை 11 மணி வரை 40% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள மகாஜதி சதனுக்கு வெளியே குண்டு வீசப்பட்டது. ஜராசங்கோவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் மீனா தேவி புரோஹித், தனது காரை குறிவைத்து வெடிகுண்டு வீசப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

“வெடிகுண்டு வீசியவர்கள் என்னைக் கொல்ல முயன்றார்கள். இது வாக்காளர்களை பயமுறுத்துவதற்கான ஒரு சூழ்ச்சி ”என்று புரோஹித் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

கடைசி கட்டத் தேர்தலில் தனது வாக்கை செலுத்திய மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர், “மேற்கு வங்கத்தில் சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கும் மத்திய படையினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share