நட்டாவை சந்தித்த எல்.முருகன்: அமைச்சரவையில் பங்கு?

பாஜக தேசியத் தலைவர் நட்டாவை, எல்.முருகன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.

பாஜக அண்மையில் வெளியிட்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. தேசியச் செயலாளராக இருந்த ஹெச்.ராஜாவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாஜகவின் தமிழகத் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை, அவரது இல்லத்தில் நேற்று (அக்டோபர் 2) நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இரண்டாம் கட்டமாக வெளியாகும் நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொறுப்பு வழங்க வேண்டும் என முருகன் வலியுறுத்தியிருக்கிறார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள சூழலில் அப்போதுதான் கட்சியினர் புத்துணர்ச்சியாக பணியாற்ற முடியும் என்றும் கோரியுள்ளார். தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல், தமிழக பாஜக நிலவரங்கள், கூட்டணி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “மாநிலத் தலைவர் என்னும் முறையில் கட்சியின் தேசியத் தலைவரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் கட்சியை வழிநடத்துவது தொடர்பாக நட்டா சில வழிகாட்டுதல்களை வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.

தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடும் பணி இன்னும் முடிவடையவில்லை எனத் தெரிவித்த எல்.முருகனிடம், நட்டாவிடம் தமிழகத்தில் இருந்து யாருக்காவது பொறுப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பினர். “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனம் பட்டியல் இறுதியானது இல்லை. இன்னும் வரவேண்டிய பட்டியல் நிறைய இருக்கிறது. அதில் வரும்” என்று அதற்கு பதிலளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு, பதிலளித்த எல்.முருகன், தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

*எழில்*�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts