rமத்திய மாநில உறவு: கேரளா சென்றார் ஸ்டாலின்

Published On:

| By admin

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய 23 ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று பிற்பகல் கேரளா சென்றடைந்தார்.

இன்று முற்பகல் சென்னை விமான நிலையத்திலிருந்து
தனி விமானத்தில் புறப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் 1 மணி அளவில் கண்ணூர் விமான நிலையம் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் தமிழக முதல்வரை கேரள உள்ளாட்சித் துறை அமைச்சரும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கோவிந்தன் மாஸ்டர் வரவேற்றார்.

அங்கிருந்து ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஓய்வு இடத்திற்குச் சென்றார். அங்கே மார்க்சிஸ்ட் கட்சியின் மற்ற தலைவர்கள் வரவேற்றனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய மாநில உறவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

தமிழக முதல்வரின் வருகையையொட்டி கண்ணூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share