=திருவோணமும் திமுகவும்

politics

திமுக இந்துக்களின் விரோதி என்று பாஜக தினந்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் திமுக நிர்வாகிகளோ, ‘பாஜககாரங்களை விட நாங்கதான் நாள் நட்சத்திரம் பாக்கறதுல கில்லாடிங்க. இது யாருக்கு சார் தெரியுது?” என்று ஆதங்கப்படடனர். என்ன ஏதென அவர்களிடம் விசாரித்தோம்.

“முன்னாள் அமைச்சரும் திமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளருமான எ. வ. வேலு நேற்று ஆகஸ்டு 31 ஆம் தேதி தனது அருணை கல்விக் குழுமத்தின் சார்பாக புதியமருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் துவக்க விழாவை திடீரென சிம்பிளாக நடத்தி முடித்துவிட்டார். அவரது மனைவி சங்கரி வேலுதான் விளக்கேற்றி எளிமையாக தொடங்கி வைத்தார். திமுக தலைவருக்கு மிக மிக நெருக்கமான எ.வ. வேலு எப்படி தலைவரை கூப்பிடாமல் இந்த விழாவை நடத்தினார் என்று திமுகவினருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதற்கும் காரணம் இருக்கிறது.

**எ.வ. வேலு திமுக தலைவர் ஸ்டாலின் கையால் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை திறக்கத்தான் திட்டமிட்டார். ஆனால் நேற்று ஆகஸ்டு 31 ஆம் தேதி நிறைந்த திருவோண நட்சத்திரம். திருவோணம் பெருமாளின் நட்சத்திரம், இந்த நட்சத்திரத்தில் ஒரு செயலைத் தொடங்கினால் அது ஓஹோவென வளரும் என்பது ஐதீகம், நம்பிக்கை. எனவேதான் திடுதிப்பென திருவோண நட்சத்திர தினமான நேற்று மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவை மட்டும் சாஸ்திரத்துக்கு தொடங்கி வைத்துவிட்டார் வேலு. திருவோணத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு”**என்று திருவண்ணாமலை மேட்டரைச் சொன்னவர்கள் அப்படியே கள்ளக்குறிச்சிக்கும் வந்தார்கள்.

“அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை திமுக அமைப்பின்படி இரு மாவட்டமாக பிரித்து இரு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்துக்கு ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்துக்கு சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியனை நியமித்தார். வசந்தம் கார்த்திகேயன் இயல்பாகவே இறை நம்பிக்கை அதிகம் உடையவர். ஜோதிடத்திலும் நிறைந்த நம்பிக்கை கொண்டவர்.

தான், முதன்முதலில் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால் அதை திருவோண நட்சத்திர தினமான ஆகஸ்டு 31 அன்று காலை ஏற்பாடு செய்தார். இதன் மூலம் தனது பொறுப்புக்கு உட்பட்ட பகுதியில் திமுகவும் தனது வெற்றியும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை.

இதைக் கேள்விப்பட்டதும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் உதயசூரியனும் விசாரித்தார். **திருவோணம் பற்றிய சங்கதி கிடைத்தவுடன் உடனடியாக திருவோண நட்சத்திரத்திலேயே மாவட்ட செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட முடிவெடுத்தார். திருவோண நட்சத்திரம் மாலை 4.46க்கு முடிவதால் அவசர அவசரமாக மாலை 4 மணிக்கு கூட்டத்தைத் தொடங்கிவிட்டார் உதயசூரியன். இப்படி திருவோண நட்சத்திரத்தில் வேலு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிவிட்டார். திமுகவின் இரு மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிவிட்டனர்”** என்கிறார்கள்.

இதான் சார் எதார்த்தம்! மத்ததெல்லாம் பொலிடிக்கல் பதார்த்தம்!

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *