கொரோனா தொற்றுப் பரவல் காலகட்டமாக இருப்பதால் பிகார் சட்டமன்றத் தேர்தலுக்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதாவது 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தங்கள் வாக்குகளை நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து செலுத்தாமல் தபால் மூலமாக செலுத்தலாம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கொரோனா பரவலையும் ஊரடங்கையும் கருத்தில் கொண்டு, எளிய, அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தபால் வாக்கு முறையில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இந்த கணக்கீட்டின்படி பிகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 71 தொகுதிகளில் உள்ள 4 லட்சம் வாக்காளர்கள் தபால் ஓட்டுப் பதிவு முறைக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 71 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில்… முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு 80 வயதிற்கும் அதிகமான மற்றும் மாற்றுத்திறனாளிகள் 52000 வாக்காளர்கள்தான் தபால் வாக்கு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள், குறிப்பிட்ட தேதியில் பாதுகாப்பான வழியில் தபால் வாக்குகளை செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதியிருக்கும் மூன்றரை லட்சம் வாக்காளர்களும் நேரில் வந்தே வாக்களிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு மக்கள் எதிராக இருப்பதையே காட்டுகிறது.
**-வேந்தன்**�,