வணக்கம்.. ஜெய்ஹிந்த்… அதிரடி இல்லாத ஆளுநர் உரை!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் உரையுடன் ஆரம்பித்தது.

ஆங்கிலத்தில் ஆளுநர் வாசித்த ஆளுநர் உரையை, பின்னர் பேரவைத்தலைவர் அப்பாவு தமிழில் படித்தார். இத்துடன் இன்றைய அவை நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

அதையடுத்து, ஆளுநரை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று வணக்கம் செலுத்தி, வழியனுப்பிவைத்தனர். அவர்கள் இருவரும் உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். முன்னதாக, ஆளுநரை வரவேற்று அவைக்கு அழைத்துச்சென்ற பேரவைத்தலைவர் அப்பாவு, நிறைவாக வழியனுப்பிவைத்தார்.

ஆளுநர் உரையில் இன்னின்ன அம்சங்கள் இடம்பெறக்கூடும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிகூட, நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வரும் பாருங்கள் எனக் குறிப்பிட்டது, அந்த எதிர்பார்ப்பைக் கூட்டியது.

50 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையில், சில புதிய அறிவிப்புகளும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

அரசின் கொள்கை நிலைப்பாடுகள் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த உரையின் முக்கிய அம்சங்கள்:

* முதலமைச்சர் நிவாரண நிதியில் திரண்ட 543 கோடி ரூபாயில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 541.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

* இன்னுயிர் காப்போம் திட்டத்தின்படி, விபத்துகளில் சிக்கிய 4, 482 பேர் இதுவரை அவசர சிகிச்சை பெற்றுள்ளனர்.

* வடகிழக்குப் பருவமழை வெள்ள சேதத்துக்காக 6320 கோடி ரூபாயை தமிழக அரசு கேட்டுள்ளது. அதை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து விடுவிக்கவேண்டும்.

* சரக்கு- சேவை வரி ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததால் ஏற்பட்ட இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இது தொடராவிட்டால் மாநில நிதிநிலைமையை பெருமளவு பாதிக்கும். எனவே, 2024வரை இதை நீட்டிக்கவேண்டும்.

**-முருகு**

�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts