Qஉதயமானது தாம்பரம் மாநகராட்சி!

politics

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தாம்பரத்துக்குத் தனிக் காவல் ஆணையரகம் அமைக்கப்பட்டு இதன் ஆணையராக நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் உட்பட சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.

இதன்மூலம் 20ஆவது மாநகராட்சியாகத் தாம்பரம் மாநகராட்சி இன்று உதயமானது. கடந்த வாரத்தில் கும்பகோணம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அடுத்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *