இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 140 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.
100 வார்டுகளை கொண்ட மதுரையில் திமுக 51 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
100 வார்டுகளை கொண்ட அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக 35 வார்டுகளிலும், அதிமுக – 3, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
சேலத்தில் திமுக 29 இடத்தையும், அதிமுக 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
55 வார்டுகளை கொண்ட நெல்லையில் அதிமுக 3 இடங்களிலும் திமுக 32 இடங்களிலும் உள்ளன.
48 வார்டுகளை கொண்ட கரூரில் திமுக 42, அதிமுக 2, காங்கிரஸ்1, சிபிஐ(எம்) 1 இடத்தையும் பிடித்துள்ளது.
இவ்வாறு 21 மாநகராட்சிகளிலும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி திமுக முன்னிலையில் உள்ளது.
** மாநகராட்சி வார்டு உறுப்பினர் **
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் படி, 1374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 1091க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 4 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு இடத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக 134 இடங்களையும், பாஜக 15 இடங்களையும், சிபிஐ 8 இடங்களையும், சி.பி.ஐ(எம்) 21 இடங்களையும், திமுக 765 இடங்களையும், காங்கிரஸ் 60 இடங்களையும், மற்றவை 92 இடங்களையும் பிடித்துள்ளன.
**நகராட்சி வார்டு உறுப்பினர்**
3843 இடங்களில் 3752க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்துக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 621 இடங்களை அதிமுக பிடித்துள்ளது. பாஜக 56, சிபிஐ 19, சி.பி.ஐ(எம்) 40, தே.மு.தி.க 12, திமுக 2309, காங்கிரஸ் 147, மற்றவை 553 இடங்களையும் பிடித்துள்ளன.
**பேரூராட்சி வார்டு உறுப்பினர்**
7621 இடங்களில் 7603 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 இடங்களுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக 1207,பாஜக 230, சிபிஐ 26, சி.பி.ஐ(எம்)-101, தேமுதிக 23, திமுக 4388, காங்கிரஸ் 367, மற்றவை 1259 இடங்களையும் பிடித்துள்ளன.
தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுகவினர், பல்வேறு இடங்களிலும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
**-பிரியா**