உக்ரைனுக்கு 450 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுத உதவி!

politics

உக்ரைனுக்கு அமெரிக்கா அடுத்தகட்ட ராணுவ உதவியை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. 450 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதிநவீன ராக்கெட்டுகள், ரஷ்ய படையெடுப்பை தகர்த்தெறிய அனுப்பப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுத உதவியில் புதிய உயர் மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் ரோந்து படகுகளும் இதில் அடங்கும்.

நேட்டோவில் இணைய கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 121 நாட்கள் ஆகிறது. பல நாடுகள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகளை எடுத்தும் எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆகையால் பல நாடுகளின் ஆதரவு உக்ரைன் பக்கம் திரும்பியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் சில வாரங்களுக்கு முன்பு இன்னும் ஆயுத உதவிகள் தேவைப்படுவதாக உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆயுத உதவியில் உக்ரைன் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹிமார்ஸ் (HIMARS) எனப்படும் ராக்கெட் அமைப்புகள் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்க நாடு வழங்கியுள்ளது. இந்த ராக்கெட் அமைப்பின் ஆரம்ப நான்கு அலகுகள் ஏற்கனவே உக்ரைனுக்கு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது உக்ரேனிய வீரர்களுக்கு அதிநவீன மற்றும் மிகத் துல்லியமான ஆயுதங்களை இயக்குவதற்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் ராணுவத்திற்கான பங்களிப்புக்கு 6.1 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *