ஸ்டாலின் மாப்பிள்ளை வீட்டில் ரெய்டு: எடப்பாடி ஷாக்!

politics

தமிழகத் தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகத்துக்கு வந்து சென்றார். நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் மோடி இன்று பிற்பகல்தான் தமிழகத்தை விட்டு கேரளாவுக்குப் புறப்பட்டார்.

இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று காலை புறப்பட்ட ஸ்டாலின் திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் ரெய்டு தகவல் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டது. உடனடியாக இதுகுறித்த விவரங்களை சேகரித்துக் கொண்ட ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் இடையில் பேசினார்.

அதேநேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கும் ரெய்டு தகவல் கூறப்பட்டது. ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் ரெய்டு என்பது கிட்டத்தட்ட ஸ்டாலின் வீட்டிலேயே ரெய்டு செய்வது போலத்தான் என்ற நிலையில், இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

“ஏற்கனவே திமுக தனது பிரச்சாரத்தில் அதிமுகவுக்கு போடும் வாக்கு பாஜகவுக்கு போடும் வாக்கைப் போன்றது. அதிமுக எம்.எல்.ஏ.ஒருவர் ஜெயித்தார் என்றால், அவர் பாஜக எம்.எல்.ஏ.என்றுதான் அர்த்தம் என பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு மூன்று நாள்களே இருக்கும் நிலையில் ஸ்டாலின் மாப்பிள்ளை வீட்டில் ரெய்டு என்பது பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசின் மிரட்டலாகத்தான் பார்க்கப்படும் என்று கருதியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ரெய்டால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், ஒரு சில வாரங்கள் முன்பு இதுமாதிரி ரெய்டுகள் நடத்தியிருந்தால் அதற்கு பலனாவது இருந்திருக்கும், தேர்தல் நெருக்கத்தில் இப்படி ரெய்டுகள் நடத்துவதன் மூலம் அதிமுக கூட்டணிக்கான வெற்றிவாய்ப்புக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று தனது கவலையை டெல்லி நண்பர்கள் மூலம் பாஜக மேலிடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்”என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *