}ஸ்ரீரங்கத்தில் மீண்டும் நுழைவுக் கட்டண வசூல்?

politics

ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அடாவடி வாகன நுழைவு கட்டண வசூல் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக மக்கள் நீதி மய்யம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வெளியூரிலிருந்து கார் மற்றும் பேருந்து மூலமாக வரும் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் வாகன நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது அன்றைய மாவட்ட நிர்வாகம்.

ஆனால் தற்பொழுது மீண்டும் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனத்திற்கான கட்டணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தால், ‘கடந்த 2021-டிசம்பர் மாதம் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் நுழைவு கட்டணத்திற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டதுடன், வரும் 2022-ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீரங்கம் வாகன வசூல் நடைமுறை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்கான அரசு தான் இந்த அரசு என மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வர், ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட ஒரு மக்கள் விரோத திட்டத்தை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தனது வருவாயை காரணம் காட்டி மீண்டும் துவங்க முயலுவதை தடுத்து நிறுத்த வேண்டும். .
இதில் கொடுமை என்னவென்றால் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனத்தை ரோட்டில் தான் நிறுத்துகிறார்கள். வாகன நுழைவுக் கட்டணம் வசூலித்தார்களே தவிர வாகனங்களை நிறுத்த எந்த இட வசதிகள் செய்து தரவில்லை. அதே நிலை இப்போது நீடிக்கும்போதும் வசூல் மட்டும் துவங்கிவிட்டது”என்று கண்டனம் தெரிவிக்கிறார் கிஷோர்குமார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0