செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
செம்மொழி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொல்லியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அதன்படி,
**2010**
*முனைவர் வீ.எஸ்.ராஜம்*- முன்னாள் மூத்த விரிவுரையாளர், தெற்கு ஆசியப் பிராந்திய ஆய்வுகள் துறை, பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
**2011**
*பேராசிரியர் பொன் கோதண்டராமன்* -மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
**2012**
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி – மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
**2013**
பேராசிரியர் ப. மருதநாயகம் -மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்
**2014**
* பேராசிரியர் கு. மோகனராசு*- மேனாள் பேராசிரியர் மற்றும் தலைவர். திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம்
**2015**
*பேராசிரியர் மறைமலை இலக்குவனார்* – மேனாள் தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி
**2016**
*பேராசிரியர் கா. ராஜன்* – மேனாள் பேராசிரியர்,வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்
**2017**
*பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்* – ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்
**2018**
*கவிஞர் ஈரோடு தமிழன்பன்*- மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை
**2019**
,பேராசிரியர் கு.சிவமணி* – மேனாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி,நெல்லை
ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என அழைக்கப்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் செம்மொழி விருதுகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
**-பிரியா**
�,