நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.
இந்திய பொருளாதாரம் இந்த காலாண்டில் 13-14 சதவிகிதம் சரிவை சந்திக்கும் என்று வெளியான செய்தி குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஆகஸ்ட் 18) விரிவாகப் பேசினார். அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றை செல்வமிக்க நாடுகளாக நாம் நினைத்துக்கொண்டாலும் கூட, அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட குறைவுதான் எனக் கூறினார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி சமீப ஆண்டுகளாக குறைந்துகொண்டுதான் இருக்கிறது எனவும், கொரோனா காலமான தற்போது நெகட்டிவ் புள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கிச் செல்வது பற்றியும், அதனை சரிசெய்வதற்கான தீர்வுகள் குறித்தும் அரசு எதுவும் கூறவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”