uபோக்சோ வழக்கு: நீக்கப்பட்ட அதிமுக பிரமுகர்!

Published On:

| By Balaji

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி கையெழுத்திட்டு நேற்று (ஜூலை 27) வெளியான தலைமைக் கழக அறிவிப்பில், “நாகர்கோவில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகிறார்.கட்சியினர் எவரும் நாஞ்சில் முருகேசனிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, “நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்.15 வயது சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த புகாரையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுளது. அதனால்தான் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் தேடி வருகிறார்கள்” என்கிறார்கள் குமரி மாவட்ட அதிமுகவினர்.

பெட்டிக் கடை வைத்திருந்த, நாஞ்சில் முருகேசன் குமரி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட்டில் பெரும்பணம் சம்பாதித்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார். அவரின் வசதியைப் பார்த்து உடனே அவரை மாவட்டப் பொருளாளர் ஆக்கினார் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த கால கட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்கிறார். ஆனால் சீட் மறுக்கப்பட உடனே பாஜகவில் இருந்து விலகி தளவாய் சுந்தரத்தைப் பார்த்து அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவிலும் பொருளாளர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. விவசாயி என்பதால் குமரியில் இருந்து பல உயர்ந்த ரக செடிகளை கொடுத்து போயஸ் தோட்டத்தில் நட்டு வைக்கும் அளவுக்கு தளவாய் மூலம் முருகேசனுக்கு தோட்டத் தொடர்பு கிடைத்தது. அதன் பலனாக 2011 இல் எம்.எல்.ஏ. சீட் கிடைத்து ஜெயித்தார். அதன் பின் மாவட்டச் செயலாளர் பதவியும் கிடைத்தது. மாசெ ஆன 31 ஆவது நாளில் ஜெ.வால் நீக்கப்பட்டார். ஜெ. மறைவை அடுத்து அமமுக சென்ற முருகேசன் அண்மையில்தான் அதிமுக திரும்பினார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share