eநவம்பர் வரை விலையில்லா கூடுதல் அரிசி!

Published On:

| By Balaji

நவம்பர் வரை கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 31ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. இதனிடையே நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை இலவச தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று (ஜூலை 6) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த மூன்று மாதங்களைப் போலவே இம்மாதமும் (ஜூலை 2020) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.7.2020 முதல் 3.7.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்துப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், “அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும்” என்றும் அறிவித்தார்.

பிரதமர் அறிவித்தபடி நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் உத்தரவு@TNGOVDIPR

இணைப்பு ???? pic.twitter.com/BRFlYYnUfL

— PIB in Tamil Nadu ???????? (@pibchennai) July 6, 2020

மேலும், “நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்” என்றும் கூறியுள்ளார் அமைச்சர் காமராஜ்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share