Jபிரதமரை சந்தித்தார் ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (ஜூலை 10) டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பிரதமருடனான ஆளுநரின் முதல் சந்திப்பாக இது அமைந்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக எல். முருகனின் ஒன்றிய அமைச்சர் குறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது தமிழகத்தில் அடுத்த கட்ட விவாதத்தை அரங்கேற்றியுள்ளது.

அண்மையில் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்று தங்களிடம் பிரதமர் கேட்டறிந்ததாக வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று காலை குடியரசுத் தலைவரை சந்தித்த ஆளுநர், மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக விவகாரங்கள் பற்றி ஆலோசித்திருக்கிறார்.

**வேந்தன்**�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts