சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
16ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜூன் 21) சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. திமுக ஆட்சி பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் .
வணக்கம் என தமிழில் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சட்ட முன்வடிவு, சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரை மீதான விவாதம் ஜூன் 22, 23 ஆகிய இரு நாட்கள் நடைபெறும். 24ஆம் தேதி முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றுவார். ஒன்று இரண்டு சட்ட முன்வடிவு கொண்டு வரப்படலாம்.
நாளை காலை 10 மணிக்கு அவை கூடியதும் 11 பேருக்கு இரங்கல் குறிப்புகள் மற்றும் 4 முக்கிய நபர்களான நடிகர் விவேக், கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன், துளசி அய்யா, டி.எம்.காளியண்ணன் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கேள்வி பதில் நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் இல்லை” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,