நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி திட்டமிட்ட நாளுக்கு ஒருநாள் முன்பாக இன்றுடன் முடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி மொத்தம் இரண்டு நாட்கள்தான் கலநது கொண்டிருக்கிறார்.
17 நாட்கள் அவை நடைபெற்றதில் பிரதமரின் வருகைப் பதிவேடு இரண்டு நாட்கள் மட்டுமே.
இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக் தாகூர், திருச்சூர் காங்கிரஸ் உறுப்பினர் பிரதாபன் ஆகியோர் பிரதமரின் வருகை பதிவேடு விவரத்தை இன்று நாடாளுமன்றத்தில் பதாகைகளாக ஏந்தி வந்தார்கள்.
“தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் முயன்றும் அரசு விவாதத்திற்கு வராமல் பார்த்துக்கொண்டது.
இது நியாயமா? மக்களவைக்கு முதல் நாளும், கடைசி நாளும் வருகின்ற பிரதமர் முதல் பிரதமர் இவர் அல்லவா! இந்த நிலை தொடரலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் விருதுநகர் எம்பி மாணிக் தாகூர்.
**வேந்தன்**