பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDG) ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 14) பேசினார். இதுதொடர்பாக நிதி ஆயோக் மீளாய்வு செய்துள்ளதைக் குறிப்பிட்ட ஜெயரஞ்சன், எஸ்டிஜி இலக்கை அடைய வேண்டுமானாலும் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார். எஸ்டிஜியின் 17 இலக்குகள் குறித்து விரிவாக எடுத்துவைத்தார்.
இலக்குகளை அடைவதில் உள்ள பிரச்சினைகளை குறிப்பிட்ட ஜெயரஞ்சன், தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும், வட மாநிலங்களில் அது மோசமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”