தேர்தல் பரபரப்பிலிருந்து தப்பிக்க ரஜினியின் யோசனை!

politics

தமிழகத்தில் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணி அமைப்பது, பிரச்சார வேட்டையைத் தொடங்குவது என அதிரிபுதியாக ஆட்டம் தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்த்து, வராமல் போனவர் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தச் சட்டமன்றத் தேர்தலைத் சந்திக்கத் தயாரானார் ரஜினி. கட்சியின் பெயர், சின்னமெல்லாம் அறிவிக்க இருந்தார். ஆனால், உடல்நிலைக் காரணமாக ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். ரசிகர்களின் பல ஆண்டுக்கால எதிர்பார்ப்புக்கு இறுதியாக முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். இருப்பினும், இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என சில கட்சிகள் ரஜினியைச் சந்திக்க நேரிடலாம். பிரச்சாரத்துக்குக்கூட அழைப்பு விடுக்கலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க ரஜினி ஒரு முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது படக்குழுவில் நான்கு பேருக்கு கொரோனா வந்துவிட்டதால், படப்பிடிப்பு ரத்தானது. இப்போது, இந்தப் படப்பிடிப்பை உடனடியாக நடத்த சொல்லியிருக்கிறார் ரஜினி. சென்னை பிலிம் சிட்டியில் அடுத்த 15 நாட்களுக்கு அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் ரஜினி. அதனால், ரஜினி செம பிஸி. யாரையும் சந்திக்க மாட்டார். இதனால், ஏதாவது அரசியல் கட்சியிலிருந்து அழைப்போ, சந்திப்புக்கோ வந்தால் ரஜினியைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காது. எப்படி ஐடியா!

வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு படங்களைக் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் படம் உருவாகிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி தின சிறப்பாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

**- தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *