இரவில் ஊரடங்கு- பகலில் பேரணியா? வருண் காந்தி கேள்வி!

politics

உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் சட்டமன்றத்தேர்தல் நடக்கலாம் என்ற நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. ஒமிக்ரான் அச்சுறுத்தலும் இருக்கும் நிலையில், சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தலைமை தேர்தல் ஆணையருக்கும், ஒன்றிய அரசுக்கும் வேண்டுகோள் வைத்தது.

இந்த நிலையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் பகல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. இதைப் பார்த்த பாஜக எம்பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

“இரவில் ஊரடங்குச் சட்டத்தை விதிப்பது, பகலில் லட்சக்கணக்கான மக்களை பேரணிகளுக்கு அழைப்பது – இது சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாதது.

உத்தரப்பிரதேசத்தின் வரையறுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளைக் கருத்தில் கொண்டு, பயங்கரமான ஓமிக்ரானின் பரவலைத் தடுப்பதா அல்லது தேர்தல் அதிகாரத்தை நிலை நாட்டுவதா? எதில் நமது முன்னுரிமை என்பதை நேர்மையாக முடிவு செய்ய வேண்டும்”என்று தெரிவித்துள்ளார் வருண் காந்தி.

பிலிபித் மக்களவைத் தொகுதியின் பாஜக உறுப்பினராக இருக்கும் வருண் காந்தி, தனது கட்சியின் அரசே உத்திரப்பிரதேசத்தில் இருந்தபோதும் இத்தகைய இரவுக்கு முரணான பகல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தயங்காமல் வெளிப்படுத்தியுள்ளார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.