�
பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.
மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரும் விவகாரம் குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 10) பேசினார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது, அதனை தமிழகம் ஏன் எதிர்த்தது போன்றவற்றை குறிப்பிட்ட அவர், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் சமநிலை பெற ஏற்படுத்தப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்றும் கூறினார்.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஏன் பின்பற்ற முடியாது என்று விளக்கிய ஜெயரஞ்சன், ஏற்கனவே நீர்த்துப் போய்க்கொண்டிருக்கும் இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் எவ்வாறு மேலும் நீர்த்துப்போகச் செய்கின்றன என்று வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டிப் பேசினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”