தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் படம்: ஓவியரைப் பாராட்டிய முதல்வர்

Published On:

| By Balaji

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கணேஷை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த புத்தகம் இருந்தாலும், எந்த மதத்தையும் சாராமல் அனைவருக்கும் பொதுவான ஒரு நூல் என்றால், அது உலக பொதுமறையான திருக்குறள்தான். அந்த நூலை உலகுக்குத் தந்தவர் திருவள்ளுவர். திமுக தலைமையிலான அரசு எப்போதுமே திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் முன்னுரிமை அளிக்கும்.

இந்த நிலையில், ஓவியர் கணேஷ் என்பவர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரையுள்ள 741 எழுத்துகள் மூலம் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து ட்விட்டரில் வெளியிட்டார். கூடவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்து ஆச்சரியமடைந்த முதல்வர் ட்விட்டரில், ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ்மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்” என்று பாராட்டியுள்ளார்.

இந்த ஓவியத்தை வரைந்த கணேஷுக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share