ராமர் இல்லாத அயோத்தி, அயோத்தியே இல்லை: ராம் நாத் கோவிந்த்

Published On:

| By Balaji

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்திரப்பிரதேச மாநில சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்டு 29) அயோத்திக்கு சென்றார். உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் முன்னிலையில் இன்று ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்.

அந்த விழாவில் பேசிய ராம் நாத் கோவிந்த், ராமர் இல்லாமல் அயோத்தி அயோத்தியே இல்லை. ராமர் இருக்கும் இடத்தில்தான் அயோத்தி உள்ளது. இந்த நகரத்தில் ராமர் நிரந்தரமாக வசிக்கிறார், ராமாயணம் நமக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது வழங்கும் உள்ளார்ந்த வாழ்க்கை மதிப்புகள் எப்போதும் மனிதகுலத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். தத்துவத்துடன், நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டும் நடத்தை நெறிமுறைகளையும் ராமாயணம் வழங்குகிறது.

பெற்றோருடன் ஒரு குழந்தையின் நடத்தை எப்படி இருக்க வேண்டும், சகோதரர்கள், கணவன்- மனைவி, ஆசிரியர்- சீடன், நண்பர்கள், , ஆட்சியாளருடன் பொதுமக்கள் மற்றும் இயற்கையுடன் மனிதர் ஆகிய அனைத்து பரிமாணங்களிலும் ராமாயணம் நமக்கு வழிகாட்டுகிறது. நாம் அனைவரிடமும் ராமர் மற்றும் சீதையைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். ராமர் அனைவருக்கும் சொந்தம், மற்றும் ராமர் அனைத்திலும் இருக்கிறார்” என்ற ராம் நாத் கோவிந்த் தன் பெயரில் இருக்கும் ராம் என்ற பெயரையும் குறிப்பிட்டுப் பேசினார்.

“என் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு (ராம் நாத் கோவிந்த்) பெயரிட்டதில் இருந்தே அவர்களுக்கு இருக்கும் ராமர் மீதான மரியாதை மற்றும் பாச உணர்வினை நான் உணர்கிறேன்”என்றார் ராம் நாத் கோவிந்த்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நான்கு நாள் உபி பயணத்தை மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் இன்று ராமர் கோவில் கட்டப்படும் இடத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share