மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

தேர்தல் ஆணையம் செல்லவில்லை: ஓபிஎஸ் தரப்பு!

தேர்தல் ஆணையம் செல்லவில்லை: ஓபிஎஸ் தரப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளதாக இன்று காலை தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்த கையோடு இரவு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தை அணுகி, ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இன்றி ஜூலை 11ஆம் தேதி, கூட இருக்கும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியானது.

இதற்குத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், “நேற்றைய தினம் நடந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றுதான் சொன்னோம். 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் இந்த 23 தீர்மானத்தையும் ரத்து செய்துவிட்டார்கள். ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றால் தாமாகவே பொதுக்குழு உறுப்பினர் பதவிகளும் ரத்தாகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என எல்லா பதவியும் ரத்தாகும் போது இவர்கள் கூற்றுப்படியே எப்படி அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது அவைத் தலைவரும், பொதுச்செயலாளரும் இல்லை என்றால் பொருளாளருக்குத்தான் அதிகாரம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. சி.வி.சண்முகம் சொல்வது போல் பார்த்தால் இப்போது பொருளாளர்தான் தலைவர்” என்று கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதால் அவைத் தலைவருக்குத் தான் அதிகாரம் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்த நிலையில் வைத்திலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்குச் செல்லவில்லை. இப்படி செய்திகள் வெளியாவது தவறு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயத்தில் ஓபிஎஸ் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோருடன் ஓபிஎஸும் பங்கேற்றிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 24 ஜுன் 2022