மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை: சி.வி.சண்முகம்

இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை:  சி.வி.சண்முகம்

இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து நேற்று வெளியேறிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், இது சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று கோஷமிட்டார். அதோடு, ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பும் செல்லாது. பொதுக்குழு நடத்த ஒருங்கிணைப்பாளர் கையொப்பமும் தேவை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வைத்திலிங்கம் கூறியது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுமான, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 24) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சி.வி.சண்முகம் பேசுகையில் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர், வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பேட்டி அளித்தார்.

கட்சி விதி எண் 19ன் கீழ் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்த அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் 5ல் ஒரு பங்கினர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுக் கூட்ட வேண்டும். நேற்று நடைபெற்ற பொதுக்குழு முறையற்றது என்று கூறும் வைத்திலிங்கத்தின் கருத்து ஏற்புடையதல்ல. பொதுக்குழுவைக் கூட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஓபிஎஸ் கையெழுத்திட்டுக் கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், ”01.12.2021கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சட்டத் திருத்தத்துக்கு நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருத்தத்தை பொதுக்குழுவில் நேற்று வைக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வைத்திருந்தாலும் நிராகரித்திருப்போம். எனவே 1.12.2021 திருத்தத்தின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் நேற்று வைக்கப்படாததால் தாமாகவே காலாவதி ஆகிவிட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இனி இல்லை.

ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் அவ்வளவுதான். இதுதான் இன்றைக்கு நிலைமை” என்று கூறினார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 24 ஜுன் 2022