மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

அதிமுகவுக்குள் பதவி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை பொதுச்செயலாளர் என கூறி வரும் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையை உருவாக்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் நேற்று நடந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. பன்னீருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் முன்கூட்டியே அரங்கிலிருந்து வெளியேறினார். மீண்டும் ஜூலை 11 பொதுக்குழு கூடும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதனை, சசிகலா நேற்று டிவியில் பார்த்ததோடு, அதிமுகவைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்திருக்கிறார். அதேசமயத்தில் அதிமுகவுக்குள் இப்படி ஒரு பதவி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ் மண்ணின் உரிமைகளைக் காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் சசிகலா புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார். சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்குத் தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.

புரட்சிப்பயணத்தை வரும் 26-06-2022 அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாகத் திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் ஆர்.கே.பேட்டையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, அம்மையார் குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்” என்று அவரது பயணத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுகவே இரு அணியாகப் பிரிந்து ஒற்றைத் தலைமைக்கான பதவி மோதல் குறிப்பாக ஓபிஎஸுக்கு கட்சிக்குள் ஆதரவு இல்லாத நிலையில் சசிகலாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வலியுறுத்தி தொண்டர்கள் சென்னையில் உள்ள அவரது வீடு முன்பு குவிந்து முழக்கம் எழுப்பினர். ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி 24 ஜுன் 2022