அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட முடியாது: ஜெயக்குமார்

politics

அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு நேற்று (ஜூன் 23) நடைபெற்று முடிந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் வரும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று பொதுக்குழு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொதுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவும் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான். அந்த வேண்டுகோளின் அடிப்படையில்தான் பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓபிஎஸ் வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை.
ஈபிஎஸ் ஒற்றை தலைமையை ஏற்பதற்கான பட்டாசு வெடிக்கிறார்கள் என்றுதான் நினைக்க முடியும். எல்லோரையும் அரவணைத்து போவதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
பாஜகவைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு கட்சி. அந்தக் கட்சி அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது. மூன்றாவது கட்சி அதிமுகவில் தலையிடுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதா என்பதை நான் பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை” என்று பதிலளித்தார்.
நேற்று நடந்த பொதுக்குழு அரங்கில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பி, தண்ணீர் பாட்டில் தூக்கி வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *