மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

கடும் போக்குவரத்து நெரிசல் : திணறும் வானகரம்!

கடும் போக்குவரத்து நெரிசல் : திணறும் வானகரம்!

அதிமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூடியிருக்கிறது. இதனை முன்னிட்டு அதிமுகவினர் வானகரம் பகுதியில் குவிந்தனர். வெளி மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள், உறுப்பினர்கள் வானகரம் வந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்வதைக் காண முடிகிறது.

அதிமுகவின் இரு தலைவர்களும் பொதுக்குழு இடம் நோக்கி வரும் வழி நெடுகிலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். சாலையோரம் கூடியிருந்த பெரும்பாலானோர் ஈபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரவாயல் பகுதியில் எடப்பாடி பழனிசாமியும் வாகனத்தில் இருந்தவாறே தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார்.ஒவ்வொரு சந்திப்பிலும் பூங்கொத்து கொடுப்பது சால்வை அணிவிப்பது, பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்பும் அளித்தனர்.

அதுபோன்று ஓபிஎஸுக்கும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். எனினும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் வாகனத்தை பார்த்து ஈபிஎஸ் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கூட்ட நெரிசலிலும், போக்குவரத்து நெரிசலிலும் இரு தலைவர்களின் வாகனங்களும் ஆங்காங்கே சிக்கியது. எனினும் முதலில் ஓபிஎஸ் திருமண மண்டபம் வந்தடைந்தார். அவரைத்தொடர்ந்தே ஈபிஎஸ் வந்தடைந்தார்.

தொடர்ந்து வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 23 ஜுன் 2022