மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

பூஜை போட்டு புறப்பட்ட பன்னீர் எடப்பாடி

பூஜை போட்டு புறப்பட்ட பன்னீர் எடப்பாடி

ஒரு வாரத்துக்கு மேலாக நிலவிய பரபரப்புக்கு மத்தியில் இன்று வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பூஜை செய்த பிறகு வீட்டில் இருந்து கிளம்பினர்.

அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா? கொண்டுவரப்படாதா? என இன்று அதிகாலை வரை அதிமுக மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தீர்மானக் குழுவால் வடிவமைக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இருவரும் பொதுக்குழு நடக்கும் இடத்துக்குச் செல்ல தயாராகினர். இதன் ஒரு பகுதியாக இருவரும் தனித்தனியே பூஜை செய்தனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை இல்லத்தில் கன்றுடன் பசுவை வரவழைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது அவர் மஞ்சள் வேட்டி-வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார்.

பூஜையைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு நடக்கும் இடத்துக்குக் பிரச்சார வாகனத்தில் கிளம்பினார். அதுபோன்று, எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டது. 30 நிமிடம் விடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து, நீண்ட நேரம் பூஜையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 23 ஜுன் 2022