மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

ஒற்றை தலைமையில் மாற்றம் இல்லை: ஜெயக்குமார்

ஒற்றை தலைமையில் மாற்றம் இல்லை: ஜெயக்குமார்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று ஜூன் 23 கூடுகிற நிலையில்... தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏராளமான தொண்டர்களும் சென்னையில் திரண்டுள்ளனர்.

இதற்கிடையே பொதுக்குழு தொடர்பாக நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் இன்று அதிகாலை , ' ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கூடாது' என்று உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பை

தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்றுதான் நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அதன்படியே பொதுக் குழு கூடுவதற்கு எந்த தடையும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவுக்கு வரவேண்டுமென்று இணை ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

தீர்ப்பால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை.கட்சியின் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை என்று முடிவு எடுத்தது எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 23 ஜுன் 2022