மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

பொதுக்குழுவில் பன்னீர்செல்வம்

பொதுக்குழுவில் பன்னீர்செல்வம்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது.

கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடைபெற்று வந்த ஒற்றை தலைமை தொடர்பான யுத்தம் கடுமையாக இருந்தது.

பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தங்களை பிரதிவாதிகளாக இணைத்துக்கொண்டு வாதாடினார்கள்.

நேற்று இரவு பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அதிமுக என்ற கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் கூறியது. அதனால் இன்றைய பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தைக் கொண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக முடிசூட்டப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... நேற்று இரவே அந்த தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்காத வகையில் இன்று அதிகாலை அளிக்கப்பட்ட தீர்ப்பில்... வரையறுக்கப்பட்ட தீர்மானங்களை தவிர எந்த புதிய தீர்மானத்தையும் தனி தீர்மானத்தையும் பொதுக்குழுவில் நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பதற்கு இருந்த தார்மீக தடை நீங்கி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அவரது ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை நாடி அதிமுக என்ற கட்சியின் சட்ட திட்ட விதிகளை காப்பாற்றி விட்டதாகவும் பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

என்றாலும் கடந்த ஒரு வாரமாக பொது வெளியிலும் நேற்று நீதிமன்றத்திலும் முழுக்க முழுக்க இரு துருவங்களாக நின்று செயல்பட்ட பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று பொதுக்குழுவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருக்கப் போகிறார்கள்.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 23 ஜுன் 2022